தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சிவகாசி வெடி விபத்தில் 14 பேர் பலி: உரிமையாளர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

சிவகாசி வெடி விபத்தில் 14 பேர் பலி: உரிமையாளர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

Karthikeyan S HT Tamil

Oct 18, 2023, 10:52 AM IST

Sivakasi Fire Accident:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சுந்தரமூர்த்தி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Sivakasi Fire Accident:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சுந்தரமூர்த்தி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Sivakasi Fire Accident:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் சுந்தரமூர்த்தி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்காகுளத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு ரெங்கபாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் சான்றிதழ் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. மேலும், பட்டாசு ஆலையின் அருகே மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று, பட்டாசு விற்பனை கடையையும் நடத்தி வந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

இந்த சூழலில், தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் பட்டாசுகளைத் தயாரிப்பதற்காக ஆலையின் பின்புறம் விதியை மீறி தகர கொட்டகை அமைத்து பட்டாசு கிப்ட் பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், பட்டாசு பெட்டி மீது பிளாஸ்டிக் தாளை ஒட்டி இயந்திரத்தில் வெப்பப்படுத்திய போது, வெப்பத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அந்த தீப்பொறி, அருகே இருந்த பட்டாசு கடைக்குள் விழுந்துள்ளது. கடையில் தீபாவளிக்காக அதிக அளவில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து சரமாரியாக வெடித்தன.

பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் தொழிலாளர்கள் தப்பியோட முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த அழகாபுரி பொன்னுதாய் (45), செம்பட்டையான்கால் கிராமத்தை சேர்ந்த சின்னதாய் (35) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், போர்மேன் கனகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சிவகாசி அடுத்த மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், வேம்பு (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார். சிவகாசி வட்டாரத்தில் ஒரநாளில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி