தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji : 'அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Senthil Balaji : 'அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Divya Sekar HT Tamil

May 16, 2023, 12:24 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் இருந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

இதுகுறித்து எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தொடங்கிய நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும் , சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 

ஆனால், இதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், மறுபடியும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.

அதேபோல, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். அதன்படி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு விசாரணைக்கு குழுவை அமைத்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி