தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மக்களே உஷார் - இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!

மக்களே உஷார் - இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!

Divya Sekar HT Tamil

May 24, 2022, 11:56 AM IST

இன்னும் இரண்டு தினங்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்னும் இரண்டு தினங்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்னும் இரண்டு தினங்களுக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை : தமிழ்நாட்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் கிடைக்கப்பெற்ற கோடை மழை மற்றும் அசானி புயல் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

Heavy Rain : உஷார் மக்களே.. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது!

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழை படி படியாக குறைந்து வருகிறது.

மழைக்கான வாய்ப்பு குறையும் வேளையில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது கிழக்கு திசையில் இருந்து தமிழ்நாடு நிலபரப்பிற்குள் வரும் காற்று போதிய வலுவில்லாததால், உணர்வெப்பம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.

குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதன் காரணமாக வெப்பநிலையில் இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. 

இன்னும் இரண்டு தினங்களுக்கு இதே நிலை தொடரும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி