தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore Crime:தொழிலதிபர் வீட்டில் 150 கிராம் தங்க கட்டிகளை திருடிய பணிப்பெண்!

Coimbatore Crime:தொழிலதிபர் வீட்டில் 150 கிராம் தங்க கட்டிகளை திருடிய பணிப்பெண்!

May 16, 2023, 11:44 AM IST

தொழிலதிபர் வீட்டில் பணி புரிந்த பெண்ணே நகையை திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் வீட்டில் பணி புரிந்த பெண்ணே நகையை திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலதிபர் வீட்டில் பணி புரிந்த பெண்ணே நகையை திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 150 கிராம் தங்க கட்டிகளை திருடிய வீட்டு பணிப்பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 93 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்முருகன். மயில்மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் உரிமையாளர் . இவர் வீட்டில் இருந்த 150 கிராம் எடை உள்ள தங்க கட்டிகள் மாயமானது. இதன் மதிப்பு மொத்தம் 12லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும். இதையடுத்து அதிர்ச்சியடைந்த பொன் முருகன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து பொன்முருகன், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தற்போது அந்த வீட்டில் பணிபுரியும் ஊழியர் ஜோதி என்பவர் தங்க கட்டிகளை திருடி எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 93 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற நகைகளை மீட்டும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலதிபர் வீட்டில் பணி புரிந்த பெண்ணே நகையை திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நேற்று கோவையில் காலை நடை பயணம் சென்ற பெண்ணிடம் காரில் சென்றவர்கள் தங்க செயினை பறிக்க முயன்ற நிலையில் வீட்டில் பணி புரிந்த பெண்ணே தங்க கட்டியை திருடியது தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி