தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’கூகிள் பே’ மூலம் அரங்கேறும் புதிய மோசடி! எச்சரிக்கும் போலீஸ்! மக்களே உஷார்!

’கூகிள் பே’ மூலம் அரங்கேறும் புதிய மோசடி! எச்சரிக்கும் போலீஸ்! மக்களே உஷார்!

Kathiravan V HT Tamil

Mar 09, 2023, 10:27 AM IST

google News
”எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் கூகுள் பே மூலம் அனுப்பாமல் எச்சரிக்கையாக இருந்து அருகே உள்ள காவல் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறுங்கள்”

கூகுள் பே இல்லாத கடைகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து இடங்களிலும் கூகுள் பே ஆக்கிரமித்துள்ளது. 10 ரூபாய் டீயாக இருந்தலும் 10ஆயிரம் ரூபாய் பொருளாக இருந்தாலும் அதனை கூகுள் பே வழியாக பணம் செலுத்தி வாங்குவதையே இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர்.

அப்படிப்பட்ட கூகுள் பே மூலம் புதிய மோசடி ஒன்றை ஒரு கும்பல் அரங்கேற்றத் தொடங்கி உள்ளது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கூகிள் பே கணக்கிற்கு பணத்தை அனுப்புவார். மேலும் உம்க்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக் ஔங்களுக்கு தெரிவிக்க உங்களை அழைக்கிறார், மேலும் பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார்.

தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவு

நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும் எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் பெற்றிருந்தல் அழைப்பாளரிடம் அடையாள சான்றுடன் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ள சொல்லுங்கள்.

இந்த மோசடி இப்போதுதான் தொடங்கி உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் என தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பினால் கூகுள் பே மூலம் அனுப்பாமல் எச்சரிக்கையாக இருந்து அருகே உள்ள காவல் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி