தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அவையில் சத்தம் போடக்கூடாது’ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு! ஐஸ் வைத்த ஓபிஎஸ்!

’அவையில் சத்தம் போடக்கூடாது’ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு! ஐஸ் வைத்த ஓபிஎஸ்!

Kathiravan V HT Tamil

Apr 06, 2023, 11:35 AM IST

“இது போன்று அவையில் பேசக்கூடாது, பெரிய சத்தம் போடக்கூடாது” என வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை
“இது போன்று அவையில் பேசக்கூடாது, பெரிய சத்தம் போடக்கூடாது” என வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை

“இது போன்று அவையில் பேசக்கூடாது, பெரிய சத்தம் போடக்கூடாது” என வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சபாநாயாகர் அப்பாவு மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ வேல்முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

சட்டப்பேரவையில் துணைக் கேள்வி கேட்க வேல்முருகன் வாய்ப்பு கேட்ட நிலையில், “பேரவைத் தலைவரே இது நியாயமா? 3 நாட்களாக அவையில் துணைக்கேள்விக்கு வாய்ப்பு கேட்கிறேன். தர மறுக்கிறீர்கள்” என சத்தமாக பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு “துணைக்கேள்வி யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சத்தத்தை ரெய்ஸ் பண்ணாதீங்க வேல்முருகன்” என்றார்.

இருப்பினும் வேல்முருகன் தொடர்ந்து எழுந்து நின்று சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு “வேல்முருகனுக்கு கடந்த மார்ச் 24, 28, 30, 31ஆம் தேதிகளில் துணைக்கேள்விகள் மட்டும் 4 முறை தந்துள்ளேன். மேலும் அவசிய பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கெல்லாம் வாய்ப்பு தந்துள்ளேன். பல உறுப்பினர்கள் ஒரு முறை கூட கேள்வி கேட்காமல் நிறைய பேர் உள்ளார்கள். அதன் அடிப்படையில்தான் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறதே தவிர கட்சி சார்பாகவோ வேறு எந்த நோக்கத்தோடோ கொடுக்கவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

பின்னர் பேசிய ஓ.பன்னீர் செல்வம்:- மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க அவையை நடத்துவதில், ஏற்கெனவே அவர் ஆசிரியர் என்ற பணியை மேற்கொண்டு இருக்கிறார். அதில் இருந்து நாங்கள் புரிந்து கொண்டது அவர் கனிவான ஆசிரியராகவும் இருக்கிறார் கண்டிப்பான ஆசிரியராகவும் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டோம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி