தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Short Film Contest: இல்லம்தேடி கல்வி மைய மாணவர்களுக்கு குறும்படபோட்டி

Short Film Contest: இல்லம்தேடி கல்வி மைய மாணவர்களுக்கு குறும்படபோட்டி

Priyadarshini R HT Tamil

Feb 20, 2023, 12:57 PM IST

இல்லம்தேடி கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களின் கற்பனை திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறும்படபோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இல்லம்தேடி கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களின் கற்பனை திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறும்படபோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இல்லம்தேடி கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களின் கற்பனை திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறும்படபோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்கொரோனா பரவலால் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடம்ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக பள்ளிக் கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தன்னார்வலர்கள் உட்படபல்வேறு தரப்பின் கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் தற்போது 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

இந்நிலையில்இல்லம் தேடி கல்வி மையங்களில்பயிலும் மாணவர்களின் கற்பனை, படைப்பாற்றல், சிந்தனைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் இல்லம்தேடி கல்வி மையங்களில் 'சிட்டுக்களின் குறும் படம்' எனும் நிகழ்வு தற்போது நடத்தப்பட உள்ளது. அதன்படி சுற்றுச் சூழல், எனது ஊர், குழந்தைகள், எனக்கு பிடித்தவை, தன் சுத்தம் உள்ளிட்ட 5 தலைப்புகளில் மாணவர்கள் 3 நிமிட குறும்படங்களைதயார் செய்யலாம். இதற்கான கதைக்களத்தை மாணவர்களே தயார் செய்ய வேண்டும்.

கதைகளத்துக்கான காட்சிகளை செல்போன் உதவியுடன் படம்பிடித்து அதை தன்னார்வலர்கள் உதவியுடன், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர்களுக்குவரும் பிப்ரவரி 24ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும். 

ஒருமையம்ஒரு குறும்படத்தை மட்டுமே தயார் செய்து அனுப்ப வேண்டும். வட்டார வள மைய அதிகாரிகள், கதையமைப்பு, ஒளிப்பதிவு, கதாப்பாத்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு 10 மதிப்பெண்களுக்குகணக்கிட்டு, வட்டார அளவில் 5 தலைப்புகளின்கீழ் 5 சிறந்தகுறும்படங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பிப்ரவரி 28ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மாவட்டஒருங்கிணைப்பாளர்கள் அதிலிருந்து 5 சிறந்த குறும்படங்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து, மாநில அலுவலகத்துக்கு மார்ச் 3ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி