தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji: செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு

Senthil Balaji: செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு

Sep 11, 2023, 11:44 AM IST

செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து வரும் வெள்ளிகிழமைக்குள் அமலாக்கத்துறை பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து வரும் வெள்ளிகிழமைக்குள் அமலாக்கத்துறை பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து வரும் வெள்ளிகிழமைக்குள் அமலாக்கத்துறை பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு உடல் நலன் கருதி ஜாமின் வழங்குவது தொடர்பாக அமலாக்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் மின்சாரம் மதுவிலக்குதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிக்கி பெற்றவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது.

இதையடுத்து வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில் அதனை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது. இதையடுத்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை, எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அதையடுத்து ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் அந்த ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்து வரும் வெள்ளிகிழமைக்குள் அமலாக்கத்துறை பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி