தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: லஞ்ச ஒழிப்புத் துறையால் கைதானவருக்கு பதவியா? - சவுக்கு சங்கர் ஆவேசம்!

Savukku Shankar: லஞ்ச ஒழிப்புத் துறையால் கைதானவருக்கு பதவியா? - சவுக்கு சங்கர் ஆவேசம்!

Karthikeyan S HT Tamil

Jul 22, 2023, 12:13 PM IST

கூடுதல் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு கைத்தறி துறையில் பணி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
கூடுதல் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு கைத்தறி துறையில் பணி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

கூடுதல் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு கைத்தறி துறையில் பணி வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

தமிழக அரசுத்துறைகளில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருபவர் சமூக ஆர்வலரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர். அரசியல்வாதிகள், ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் இவர், தற்போது ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

அதில், கூடுதல் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு கைத்தறி துறையில் பணி வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரது ட்வீட்டில், ஜவுளி கேங் அறிவோம், பெயர் : கர்ணன். கூடுதல் இயக்குநராக இருந்து ஓய்வு சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால் இவர் தற்போது அட்வைஸர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஒரு வாரமாக, தலைமைச் செயலகத்தின் ஒன்பதாவது மாடியில் கைத்தறி துறை அரசு முதன்மை செயலர் அலுவலகம் ஒட்டிய அலுவலகத்தில் இருந்து கொண்டு கைத்தறி சிறப்பு மேலாண்மை துறை ஆலோசராக அன் அபிஷியலாக, பணி நியமனம் வருவதற்கு முன்பாகவே பணி புரிந்து வருகிறார்.

இவர் இலவச வேட்டி சேலை தொடர்பான டெண்டர் பரிவர்த்தனை பேசி முடித்துத் தருவார். பணத்தை வசூல் செய்து தருவார் என்பதால்." இவ்வாறு சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். சவுக்கு சங்கரின் ட்வீட்டில் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜியும், கண்காணிப்பாளரும் சீரூடையின்றி சந்தித்து பேசியதாக சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நேற்று மதியம் ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "இன்னும் சிறையில் மருத்துவர்கள் அறையில் தான் அண்ணன் செந்தில் பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார். பிரகாஷ், மோகன் என்ற இரண்டு ரேஷன் ஸ்டோர் காவலர்கள் சிறப்பாக தயாரித்த உணவை விநியோகம் செய்தனர். இன்றும் டிஐஜி முருகேசன், கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சீருடையின்றி காலை 7.30 மணிக்கு மருத்துவமனை சென்று கைதி செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி அவருக்கு தேவையானவைகளை செய்துள்ளனர்." என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி