தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Magalir Urimaithogai: மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் டோக்கன் விநியோகம் - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Magalir Urimaithogai: மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் டோக்கன் விநியோகம் - ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Jul 19, 2023, 11:53 AM IST

Chennai: பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Chennai: பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Chennai: பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் 24ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனார்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ள நிலையில் நாளை முதல் தெருவாரியாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு தொடங்க உள்ள நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 7000 கோடி ரூபாயை நடப்பு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கியதுடன் ஒரு கோடி மகளிருக்கு இந்த உரிமை தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

தலைநகர் சென்னையில் வரும் 24ம் தேதி முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ பயனார்கள்கள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ளது; நாளை முதல் தெரு வாரியாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டோக்கன் வழங்கப்படும், அதற்கு ஏற்ப அந்தந்த நியாய விலைக்கடைகளுக்கு குறிப்பிட்ட தேதி, நேரத்தில் பொதுமக்கள் வந்தால் போதும். அதேபோல் வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு முகாம்களிலேயே வங்கிக்கணக்கு ஏற்படுத்தி தரப்படும்.

நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி