தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vedasandur: இரும்பு கம்பிகளை திருடி மது அருந்திய திருடர்கள்.. தர்ம அடி கொடுத்த மக்கள்!

Vedasandur: இரும்பு கம்பிகளை திருடி மது அருந்திய திருடர்கள்.. தர்ம அடி கொடுத்த மக்கள்!

Karthikeyan S HT Tamil

Apr 27, 2023, 12:44 PM IST

Vedasandur: வேடசந்தூரில் இரும்புக் கம்பிகளை திருடி மது அருந்திய இருவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
Vedasandur: வேடசந்தூரில் இரும்புக் கம்பிகளை திருடி மது அருந்திய இருவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Vedasandur: வேடசந்தூரில் இரும்புக் கம்பிகளை திருடி மது அருந்திய இருவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதியில் இரும்பு கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் கடையின் பின்புறம் உள்ள குடோனில் பழைய இரும்பு கம்பிகளை சேகரித்து வைத்துள்ளனர். முன்புறம் உள்ள கடையில் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில், பின்னால் இருந்த குடோனில் இருந்து இரும்பு கம்பிகளை இரண்டு பேர் திருடிச்சென்றுள்ளனர். இவர்கள் இரும்பு கம்பிகளை திருடுவதைப் பார்த்த பெண் ஒருவர் கடை உரிமையாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் அவர்களைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோயில் தெருவில் உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் அருந்திவிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது நாங்கள் திருடவில்லை என்று கூறியுள்ளனர். 

இதனிடையே திருடர்களில் ஒருவன் போதை தலைக்கேற சாலையிலேயே படுத்து உருண்டுள்ளார். இதையடுத்து திருடிய இரண்டு நபர்களையும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து விசாரணை செய்த போது, வேடசந்தூர் சாலை தெருவில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் கம்பிகளை விற்றுவிட்டு அந்த பணத்தின் மூலமாக தான் மதுபானம் அருந்தினோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் வைரக் கவுண்டனூரை சேர்ந்த ராஜா என்பதும் மற்றொருவர் சந்தப்பேட்டையை சேர்ந்த கௌதம் என்பதும் தெரிய வந்தது. மேலும் மதுபோதை அதிகமானதால் கௌதம் அங்கேயே படுத்து மட்டையானார்.

அதனைத் தொடர்ந்து கௌதம் மீது தண்ணீரை தெளித்து அவரை தெளியவைத்தனர். போதையில் இருந்ததால் இருவரிடமும் விவரங்களை சேகரித்த காவல்துறையினர் பின்னர் காவல் நிலையம் வருமாறு கூறி அனுப்பிவைத்தனர். இரும்புக் கம்பிகளை திருடிய இரண்டு திருடர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி