தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul: ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்து கோமாவுக்கு சென்ற மாணவன்! தனியார் பள்ளியில் விசாரணை

Dindigul: ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்து கோமாவுக்கு சென்ற மாணவன்! தனியார் பள்ளியில் விசாரணை

Sep 13, 2023, 01:14 PM IST

பழனியில் செயல்பட்டு வரும் அக்‌ஷயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் விளையாடி கொண்டிருந்தபோது தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்ற தகவல் வெளியே தெரியாமல் பள்ளி நிர்வாகம் மறைந்ததாக கோட்டாச்சியர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்‌ஷயா அகாடமி. சிபிஎஸ்இ பள்ளி இங்கு சுமார் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து கடந்த 8ஆம் தேதி மாலை இடைவேளையின் போது பள்ளி மாணவர்கள் ஊஞ்சல், ராட்டினம் போன்றவற்றில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

அப்போது ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்த ஆயக்குடியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் சதீஷ்குமார் என்பவர் கீழே தவறி விழுந்ததாக கூறப்படுறது. இதில் அவரது தலையில் அடிபட்டு பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி பள்ளி நிர்வாகம் தரப்பில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் கோவையில் உள்ள கேஎம்சிஹெச் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவரை அனுமதித்துள்ளனர்.

ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்ததால் மாணவர் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்காமல் மறைக்கப்பட்டதாகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடிக்கு தகவல் வந்ததுள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பழனி கோட்டாட்சியர் சரவணன், வட்டாட்சியர் பழனிச்சாமி மற்றும் காவல் துறையினர் பள்ளியில் மாணவர் விளையாடிய இடத்தை ஆய்வு செய்து, சக மாணவர்களிடம் நடந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அக்‌ஷயா அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி