தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Seeman: ’தென் மாவட்டங்களில் ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்!’ சீமான் வேண்டுகோள்!

Seeman: ’தென் மாவட்டங்களில் ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்!’ சீமான் வேண்டுகோள்!

Kathiravan V HT Tamil

Dec 31, 2023, 09:07 PM IST

”மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் நெருக்கடிக்கு உள்ளாகாமல் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் வழிவகுத்துள்ளது”
”மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் நெருக்கடிக்கு உள்ளாகாமல் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் வழிவகுத்துள்ளது”

”மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் நெருக்கடிக்கு உள்ளாகாமல் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் வழிவகுத்துள்ளது”

வட மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டதைப் போலவே, கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களிலும் ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் சனவரி மாதம் 7ஆம் நாள் (07.01.2024) நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் (B.T/BRTE) தேர்வானது, பிப்ரவரி மாதம் 4ஆம் நாள் (04.02.2024) அன்றைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது; இவ்வறிவிப்பின் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் நெருக்கடிக்கு உள்ளாகாமல் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் வழிவகுத்துள்ளது.

அதே சமயம் வடமாவட்டங்களைப் போலவே கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் (B.T/BRTE) தேர்வினை ஒத்திவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இத்தகைய பாகுபாட்டால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆகவே, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கனமழையால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, தென் மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உடனடியாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டு தேர்வர்களின் நலன் காக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி