தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tiruvannamalai Atm Robbery: முக்கிய குற்றவாளியைக் கைது செய்த காவல்துறை!

Tiruvannamalai ATM Robbery: முக்கிய குற்றவாளியைக் கைது செய்த காவல்துறை!

Feb 16, 2023, 12:14 PM IST

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய ஹரிப் (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய ஹரிப் (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய ஹரிப் (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்

திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கை வரிசை காட்டிய கொள்ளையர்களில் முக்கிய குற்றவாளியை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

Heavy Rain : உஷார் மக்களே.. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது!

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட மூன்று ஏடிஎம் வங்கி மற்றும் ஒரு தனியார் வங்கி ஏ டி எம் ஐ கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து சுமார் 80 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திருவண்ணாமலையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும் வேலூர் தரக டிஐஜி முத்துச்சாமி மற்றும் ஐந்து மாவட்ட எஸ்பிக்கள் அடங்கிய குழுவினர் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது கொள்ளை கும்பல் ஏடிஎம் மையங்களில் முன்கூட்டியே நோட்டமிட்டு பின் கொள்ளை திட்டத்தை ஆரம்பித்துள்ளனர் ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டாட்டா சுமோ வாகனத்தில் முகத்தை மூடிக்கொள்ளும் வகையில் மங்கி குல்லா அணிந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 1.19 மணி அளவில் முதல் கொள்ளையை நடத்தியுள்ளனர் பின்னர் அவர்கள் அவலூர்பேட்டை ரோடு கலசபாக்கம் போளூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்தனர். இவர்கள் ஷட்டரை இறக்கிவிட்டு கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் 20 நிமிடங்களில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர். கடைசியாக ஞாயிறன்று அதிகாலை 4:20 மணி அளவில் கொள்ளையடித்தவர்கள் தேவிகாபுரம் ஆரணி ஆற்காடு ராணிப்பேட்டை பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு தப்பிச் சென்றுள்ளனர். வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடிகளிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளது இதிலிருந்து தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் தனிப்படையினர் சுங்கச்சாவடி இல்லாத சாலைகளில் கொள்ளையர்களின் டாட்டா சுமோவை கடந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகன ஆந்திர பதிவு எண் மட்டும் இதுவரை உறுதியாக வில்லை இரண்டு நாட்களில் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்தவர்கள் 6பேர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என புதனன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை பெங்களூரில் வைத்து காவல்துறை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் பெங்களூரில் கைது செய்யப்பட்ட அந்த நபரை திருவண்ணாமலை அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக தனிப்படை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அரியானாவை சேர்ந்த ஹரிப் (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களைத் தேடும் பணியை தனிப்படை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி