தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Plus 2 Student Pregnant By Police

பிளஸ்2 மாணவியை கர்ப்பமாக்கி தப்பியோடிய ஆயுதப்படை போலீஸ் சஸ்பெண்ட்

Priyadarshini R HT Tamil

Mar 26, 2023, 08:11 AM IST

சேலம் அருகே பிளஸ்2 மாணவி கர்ப்பமாக்கிய வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் தப்பியோடிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் அருகே பிளஸ்2 மாணவி கர்ப்பமாக்கிய வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் தப்பியோடிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் அருகே பிளஸ்2 மாணவி கர்ப்பமாக்கிய வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ்காரர் தப்பியோடிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது : 

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

எங்களது மகள் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததில் எங்கள் மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். எங்களுடைய மகளுக்கு 17 வயதே ஆகிறது. எனவே எங்கள் மகளின் கர்ப்பத்துக்கு காரணமான போலீஸ்காரர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். 

இந்த புகார் குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், மாணவியை கர்ப்பமாக்கிய பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் பிரபாகரனை அழைத்து வர 2 ஆண் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் பிரபாகரனை பிடித்துக்கொண்டு வந்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். சிறிது நேரத்தில் விசாரணையின் இடையே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து வெளியே வந்த அவர் அங்கிருந்த தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போலீஸ்காரர் தப்பியோடியது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

மேலும் விசாரணையின்போது தப்பியோடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தப்பியோடிய பிரபாகரனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் போலீஸ்காரர் பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்