தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் படுகொலை.. நடுரோட்டில் ஓட ஓட விரட்டி.. முகத்தில் அரிவாளை சொருகிவிட்டு சென்ற கொடூரம்!

Crime : ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் படுகொலை.. நடுரோட்டில் ஓட ஓட விரட்டி.. முகத்தில் அரிவாளை சொருகிவிட்டு சென்ற கொடூரம்!

Divya Sekar HT Tamil

Jun 27, 2023, 12:00 PM IST

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி. இவரின் கணவர் மதியழகன்(45). மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இன்று காலை மதியழகன் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

அப்போது 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளுடன் வந்தனர். அதனை பார்த்த மதியழகன் தன்னை கொலை செய்வதற்கு வருவதை அறிந்த அங்கிருந்து வேகமாக ஓட தொடங்கினார். அப்போது மதியழகனை 5 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்தனர்.

மதியழகன் முகத்தில் கடுமையாக வெட்டியதால் முகம் முழுவதும் சிதைந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை செய்த கும்பல் மதியழகன் முகத்தில் அரிவாளை சொருகிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். கொலை செய்யப்பட்ட மதியழகன் மனைவி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவரது மகனுக்கும் தகவல் தெரிந்து அவர்கள் அங்கு வந்தனர். கொலை செய்யப்பட்டு சாலையில் கிடந்த மதியழகன் உடலை பார்த்து கதறி துடித்து அழுதனர்.

இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கொல்லப்பட்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் 2020இல் தாழங்குடாவில் மதிவாணன் என்பவர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகவும் மதியழகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மதியழகன் ஏற்கனவே மதிவாணன் கொலை வழக்கில் தொடர்பில் உள்ளவர் என்பதால் பழிவாங்கும் நோக்கத்துடன் அவர் கொல்லப்பட்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் நடந்த இடத்திலும், தாழங்குடா கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கொலை செய்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி