தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழகத்தில் இருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள் - இதுதான் காரணமாம்!

தமிழகத்தில் இருந்து வெளியேறும் வடமாநில தொழிலாளர்கள் - இதுதான் காரணமாம்!

Divya Sekar HT Tamil

Mar 04, 2023, 12:28 PM IST

தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை தவறான வீடியோ பரப்புவர்களின் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை தவறான வீடியோ பரப்புவர்களின் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை தவறான வீடியோ பரப்புவர்களின் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. மேலும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் கூறியிருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

அதேபோல தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இடம் என்பது போல் பொய் தகவலை பரப்புகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பீகாரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக பீகார் அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வரவுள்ளது. இதுகுறித்து இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாநில குழுக்கள் பங்கேற்கவுள்ளனர்.

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியான வீடியோக்கள் போலியானவை என்றும் இதுபோன்று வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், திருப்பூர், மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். அவர்கள் அதிக அளவில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் தெரிவிக்கையில், ”தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. அடுத்த வாரம் ஹோலி பண்டிகை வருகிறது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காகவே நாங்கள் எங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறோம். பணிபுரியும் இடங்களிலும் தங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.

ஆனால் ஒருசிலர் தவறான வீடியோக்களை பார்த்துவிட்டு அச்சத்தில் வெளியேறியுள்ளனர். தவறான வீடியோ பரப்புவர்களின் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்”என தெரிவித்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி