தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Naam Tamilar Party: தேர்தல் நேரத்தில் கட்சியை முடக்கும் முயற்சி - என்ஐஏ நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

Naam Tamilar Party: தேர்தல் நேரத்தில் கட்சியை முடக்கும் முயற்சி - என்ஐஏ நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

Feb 07, 2024, 09:40 PM IST

போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்தி சுரேஷ், சைரன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவில்லை. ஆனாலும் படத்தில் இவர்களுக்கு இடையிலான கனெக்‌ஷன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் இடம்பிடித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், கோவை முருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஆதரவாளர்கள் வீடுகளில் கடந்த 2ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி தரப்பில் நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சோதனை நடைபெற்றதாகவும், என்ஐஏ விசாரணைக்கு ஒத்துழைத்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளமாட்டோம் எனவும் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து என்ஐஏ அனுப்பிய சம்மன் அடிப்படையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன், கோவையை சேர்ந்த முருகன் ஆகிய மூன்று பேர் விசாரணைக்காக ஆஜராகினர்.

இடும்பவனம் கார்த்திக், தென்னகம் விஷ்னு ஆகியோர் விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு மறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் சங்கர், "என்ஐஏ விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவோம். அவர்கள் கேட்கக்கூடிய ஆவணங்களை வழங்குவோம் என்று தெரிவித்தார்.

அத்துடன், தேர்தல் நேரத்தில் கட்சியின் செயல்பாட்டை முடக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி