தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Krishnagiri : 2 குழந்தைகளை கொன்ற தாய் - இதுதான் காரணமாம்.. தாயின் விபரீத முடிவு!

Krishnagiri : 2 குழந்தைகளை கொன்ற தாய் - இதுதான் காரணமாம்.. தாயின் விபரீத முடிவு!

Divya Sekar HT Tamil

Jan 22, 2023, 12:54 PM IST

Krishnagiri suicide: குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Krishnagiri suicide: குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Krishnagiri suicide: குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி : பர்கூர் அடுத்த செந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் கவுரி(26). இவரது கணவர் கெட்டூரை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் முத்துராஜ். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன் ஜீவன்(4), மகள் பாவனாஸ்ரீ (2) என இரு குழந்தைகள் இருந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!

Freshworks Jobs: ‘+2 முடிச்சா IT வேலை ரெடி! பயிற்சியின் போது 10 ஆயிரம் சம்பளம்! அப்புறம் பல லட்சத்தில் சம்பளம்!’

Weather Update: ’தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கோடை மழை! குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!’

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

முத்துராஜ் சரிவர வேலைக்கு செல்லாததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி மீண்டும் சண்டை போட்டுள்ளனர். இதனால் கௌரி கணவரிடம் சண்டையிட்டு கொண்டு, குழந்தைகளுடன் கந்திக்குப்பம் அடுத்த செந்தாரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கௌரி, நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தைகள் ஜீவன், பாவனா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். கவுரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், குழந்தைகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி