தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Viral : 7 ஆண்டுகளாக சரிசெய்யப்படாத சாலை..சிறுவன் செய்த செயல்- குவியும் பாராட்டு!

Viral : 7 ஆண்டுகளாக சரிசெய்யப்படாத சாலை..சிறுவன் செய்த செயல்- குவியும் பாராட்டு!

Divya Sekar HT Tamil
Jan 22, 2023 11:10 AM IST

Puducherry Road : புதுச்சேரியில் 7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலையால் தனது தாத்தாவிற்கு அடிப்பட்டதால் தனி ஒருவனாக சாலையை சீரமைத்த சிறுவனின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தனி ஒருவனாக சாலையை சீரமைத்த சிறுவன்
தனி ஒருவனாக சாலையை சீரமைத்த சிறுவன்

ட்ரெண்டிங் செய்திகள்

சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சாலை பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(60), இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வில்லினூர் - பத்துகண்ணு சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலை பள்ளத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

அப்போது பின்பக்கமாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது பலமாக மோதியது. இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேகரின் பேரன் மாசிலாமணி (13). அங்குள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். தனது தாத்தா சாலையில் உள்ள பள்ளத்தால் தான் விபத்தில் சிக்கியுள்ளார் என்பதை உணர்ந்த சிறுவர் சாலையை சீரமைக்க முடிவு செய்துள்ளார்.

அதேபோல் பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி நேற்று காலை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டான்.

சிறுவன் தனி ஒருவனாக நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கல், சாலையோரம் உள்ள மணல் ஆகியவற்றை போட்டு சுத்தியால் தட்டி தண்ணீர் ஊற்றி மட்டம் செய்து சாலையை சீரமைத்துள்ளார். மாணவனின் இச்செயலை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சிறுவனை பாராட்டிவிட்டு சென்றனர்.

மேலும் சாலையை சரிசெய்யும் சிறுவனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இதனை பார்த்த சிலர் சிறுவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சிறுவன் தனி ஒருவனாக நின்று சாலையை சரி செய்த போதும் அவ்வழியாக சென்றவர்கள் யாரும் உதவி செய்ய முன்வராதது வேதனை தரும் விஷயமாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்