தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோயில் குளத்தில் 5 பேர் மரணம்! யார் காரணம்? சேகர்பாபு பேரவையில் விளக்கம்!

கோயில் குளத்தில் 5 பேர் மரணம்! யார் காரணம்? சேகர்பாபு பேரவையில் விளக்கம்!

Kathiravan V HT Tamil

Apr 06, 2023, 01:08 PM IST

”:தாமாக முன் வந்து அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் எடுத்து கொண்ட பணிகளால் இது போன்ற விபத்துக்கள் நடைபெருகிறது”
”:தாமாக முன் வந்து அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் எடுத்து கொண்ட பணிகளால் இது போன்ற விபத்துக்கள் நடைபெருகிறது”

”:தாமாக முன் வந்து அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் எடுத்து கொண்ட பணிகளால் இது போன்ற விபத்துக்கள் நடைபெருகிறது”

நங்கநல்லூரில் கோயில் குளத்தில் 5 பேர் உயிரிழந்த நிகழ்வு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று காலை இதயம் இருப்பவர்கள் அனைவரும் இரக்கப்படும் அளவிற்கு நடந்த துயரசம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மற்றும் வேல் முருகன், விசிக, ஜெகன் மூர்த்தி, கோ.க.மணி ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்து அமைந்துள்ளார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இந்த திருக்கோயிலின் குளம் என்பது கோயிலுக்கு சொந்தமானது அல்ல; அது பஞ்சாயத்தால் நிர்வகிக்க கூடிய குளம். இந்த குளத்தில் கடந்த 4 ஆண்டுகாலமாகத்தான் தீர்த்தவாரி நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்தான் நடைபாதை, சுற்றுசுவர் ஆகியவற்றை 50 லட்சம் செலவில் ஏற்படுத்தி தந்தார்

கடந்த அண்டு 8-9-2022 அன்று தொல்லியல் துறை அனுமதி, மண்டல குழு அனுமதி, இந்து சமய அறநிலையத்துறை அனுமதியின்று கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டார்கள், உடனடியாக இணை ஆணையாளர் அவர்கள் 6-9-2022 அன்று செயல் அலுவலர் ஒருவரை தக்காராக நியமித்தார்கள். இதற்கு எதிராக கோயிலில் உள்ளவர்கள் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

தாமாக முன் வந்து அந்த அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் எடுத்து கொண்ட பணிகளால் இது போன்ற விபத்துக்கள் நடைபெருகிறது.

எது எப்படி இருந்தாலும் விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் போய்வுள்ளது. ராகவன், ராகவா, விக்னேஷ், சூர்யா, யோகேஸ்வரன் என்று 5 விலைமதிப்பில்லாத உயிர்கள் போயுள்ளது.

அந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற உடன் முதலமைச்சர் என்னை அழைத்து குளத்தை தூர்வாராமல் ஏன் வைத்திருந்தீர்கள் என்று கண்டித்தார்கள்.

ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதை இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இவ்வுளவு பெரிய இழப்பில் குற்றமாக சொல்ல நான் விரும்பவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்கு அமைச்சர் நேரடியாக சென்று ஆறுதல் கூறியதோடு, 2 லட்சம் ரூபாய் நிவரணமாக அளித்துள்ளார்கள். இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஐந்து சிறுவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி