தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister Mrk Panneer Selvam's Reply To Velmurugan Mla's Question On Setting Up Of Agriculture College At Panruti In The Tamil Nadu Legislative Assembly

’வேல்முருகனை திருப்தியே படுத்த முடியவில்லை’ கலாய்த்துவிட்ட MRK பன்னீர் செல்வம்!

Kathiravan V HT Tamil

Mar 31, 2023, 10:53 AM IST

பண்ரூட்டில் பாலூர்பண்ணை பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க அமைச்சர் முன் வருவாரா? என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருந்தார்
பண்ரூட்டில் பாலூர்பண்ணை பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க அமைச்சர் முன் வருவாரா? என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருந்தார்

பண்ரூட்டில் பாலூர்பண்ணை பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க அமைச்சர் முன் வருவாரா? என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருந்தார்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறைரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் பேரவையில் நாள்தோறும் நடந்து வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் பேசுகையில், நீண்டநெடிய நாட்களாக எனது தொகுதியில் கலைக்கல்லூரி கேட்டேன் கிடைக்கப்பெறவில்லை. 

முதலமைச்சரை நேற்று முன் தினம் சந்தித்து வரும் நிதியாண்டில் எனது தொகுதியில் வேளாண் கல்லூரியை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். எனது தொகுதியில் பாலூர்பண்ணை பகுதியில் இடம் உள்ளது. வேளாண் கல்லூரி அமைக்க அமைச்சர் முன் வருவாரா என்பதை கேட்டு அமர்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நம் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை திருப்தி படுத்த முடியவில்லை. கலைஞர் ஆட்சி காலத்தில் அவர் தொகுதியில் அண்ணா பொறியல் கல்லூரி கொடுத்தார். புதிய வேளாண் கல்லூரி தொடங்க 110 ஏக்கர் நிலம் வேண்டும், தற்போது நிலம்தான் பிரச்னை.

பாலூர்பண்ணையை பொறுத்தவரை 50 ஏக்கர்தான் உள்ளது. மீதி 60 ஏக்கருக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. தற்போது நிதி பிரச்னை முதல்வருடன் பேசி வருங்காலத்தில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

டாபிக்ஸ்