தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: யார் பூசாரியாக செயல்படுவது? - ஐகோர்ட் கொடுத்த அட்வைஸ்!

MHC: யார் பூசாரியாக செயல்படுவது? - ஐகோர்ட் கொடுத்த அட்வைஸ்!

Karthikeyan S HT Tamil

Feb 09, 2023, 01:37 PM IST

Temple Priest Case: கோயிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பதில் இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில், கோயிலை பூட்டக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Temple Priest Case: கோயிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பதில் இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில், கோயிலை பூட்டக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Temple Priest Case: கோயிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பதில் இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில், கோயிலை பூட்டக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா எம்.பெருமாள்பட்டி அருகே உள்ள பேச்சிவிருமன் கோயிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பதில் இருவருக்கு இடையே சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து கிராம கோயிலை பூட்டுவதற்கு உண்டான நடவடிக்கையை, திருமங்கலம் தாசில்தார் மேற்கொண்டார் .

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

Heavy Rain : உஷார் மக்களே.. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது!

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

Weather Update: ‘தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கோடை மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா எம்.பெருமாள்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"திருமங்கலம் தாலுகா மதிப்பனூர் , எம்.பெருமாள்பட்டியில் பேச்சிவிருமன் கோயில் உள்ளது. இந்த கிராம கோயிலில் யார் பூசாரியாக இருப்பது என்பதில் இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம கோயிலை பூட்டுவதற்கு உண்டான நடவடிக்கையை, திருமங்கலம் தாசில்தார் மேற்கொண்டார் . இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே கோயிலை பூட்டிய தாசில்தாரின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "பேச்சிவிருமன் கோயிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது இருவருக்கு இடையே உள்ள பிரச்னை. அதற்காக கோயிலை பூட்டக்கூடாது. கோயிலை பொது வழிபாட்டிற்காக திறந்து வைக்க வேண்டும். ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ, குற்றம் நடந்தாலோ, சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்" என கருத்து தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி