தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மது போதையில் பாஜக பெண் பிரமுகர் வீட்டில் ரகளை செய்த காவலர்கள் கதியை பாருங்க!

மது போதையில் பாஜக பெண் பிரமுகர் வீட்டில் ரகளை செய்த காவலர்கள் கதியை பாருங்க!

Mar 03, 2023, 11:54 AM IST

குடிபோதையில் காவலர்கள் இருவரும் தகராறு செய்ததை விஜயகுமார் வீடியோ எடுத்துள்ளார்.
குடிபோதையில் காவலர்கள் இருவரும் தகராறு செய்ததை விஜயகுமார் வீடியோ எடுத்துள்ளார்.

குடிபோதையில் காவலர்கள் இருவரும் தகராறு செய்ததை விஜயகுமார் வீடியோ எடுத்துள்ளார்.

கொருக்குப்பேட்டையில் உள்ள பாஜக பெண் பிரமுகர் வீட்டில், குடிபோதையில் ரகளை செய்த 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

Gold Rate Today : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து விற்பனை.. இதோ இன்றைய விலை நிலவரம்!

சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பாலாஜி (32) மற்றும் பரித்ராஜா (29). இவர்கள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதையில் கொருக்குப்பேட்டை மணலி சாலையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தேவி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நள்ளிரவில் காவலர்கள் தங்கள் வீட்டுக்கு வந்ததால் தேவியின் கணவர் விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். பின் சுதாரித்துக் கொண்டு, எதற்கு எங்கள் வீட்டிற்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதில் அவருக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் காவலர்கள் இருவரும் தகராறு செய்ததை விஜயகுமார் வீடியோ எடுத்துள்ளார். இதை அடுத்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையருக்கு புகாராக அவர் கொடுத்தார். 

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி விசாரணை நடத்தினார். இதில் இருவரும் குடிபோதையில் இருந்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குடிபோதையில் செல்பவர்கள் மீது வழக்கு பதியும் பொறுப்பில் உள்ள காவலர்களே போதையில் ரகளை செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காவல்துறையி வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி