தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kumbakonam: போதைக்கு மதுவில் சானிட்டைசர் கலந்து குடித்த அலட்சியம்.. 2 பேர் பலியான பரிதாபம்

Kumbakonam: போதைக்கு மதுவில் சானிட்டைசர் கலந்து குடித்த அலட்சியம்.. 2 பேர் பலியான பரிதாபம்

Sep 22, 2023, 10:42 AM IST

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கும்பகோணத்தில் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

கும்பகோணம் சுற்று வட்டார பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருபவர்கள் சௌந்தர்ராஜ் மற்றும் பாலகுரு. இவர்கள் இருவரும் நேற்று மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆத்தங்கரையின் படித்துறைக்கு சென்றனர்.

 அங்கு தாங்கள் வாங்கிச் சென்ற மதுவை அருந்துள்ளனர் அப்போது அவர்கள் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசரை கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதை அருகில் இருந்தவர்கள் தடுத்தும் அவர்கள் அலட்சியமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் மேல காவேரி பகுதியில் சடலமாக கிடைத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இரண்டு பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமிழகத்தில் பலமுறை சானிடைசரை மதுவில் கலந்து குடித்தவர்கள் உயிரிழந்தும் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி