தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை திறப்பு: எங்கு தெரியுமா?

நாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை திறப்பு: எங்கு தெரியுமா?

Karthikeyan S HT Tamil

Feb 13, 2023, 11:59 AM IST

Karuvadu Shop in Madurai Junction: நாட்டிலேயே முதன் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனைகம் திறக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
Karuvadu Shop in Madurai Junction: நாட்டிலேயே முதன் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனைகம் திறக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

Karuvadu Shop in Madurai Junction: நாட்டிலேயே முதன் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனைகம் திறக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் பிரதமரின் 'ஒரு பொருள், ஒரு நிலையம்' என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. அதன் கீழ் தெற்கு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஆறு ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பிரபலமான உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

மதுரை ரயில் நிலையத்தில் தற்போது சுங்குடி சேலை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடியில் மக்ரூன், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள், விருதுநகரில் சாத்தூர் காராச்சேவு, கோவில்பட்டியில் கடலை மிட்டாய், தென்காசியில் மூங்கில் பொருட்கள் போன்றவை இந்த விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தின் உட்புறம் இந்தியாவிலேயே முதன்முறையாக கருவாடு விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. மண்டபம் பகுதியைச் சேர்ந்த புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் இந்த விற்பனை நிலையம் மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

மகளிர் சுயஉதவிக குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, தங்கள் மாவட்டத்தின் பிரபலமான கருவாட்டை தயாரித்து இங்கு விற்பனை செய்து வருகின்றனர். நாட்டிலேயே முதல் முறையாக ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக கருவாட்டின் வாடை அதிகளவில் இருக்கும். ஆனால், கருவாடு வாடையின்றி அனைத்துமே முறையான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி