தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு தேமுதிகவிற்கு அழைப்பு

Annamalai: அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு தேமுதிகவிற்கு அழைப்பு

Jul 26, 2023, 12:13 PM IST

NDA கூட்டணி தொடர்பாக தில்லியில் நடந்த அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
NDA கூட்டணி தொடர்பாக தில்லியில் நடந்த அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

NDA கூட்டணி தொடர்பாக தில்லியில் நடந்த அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

பாஜக தலைவர் அண்ணாமலை இராமேஸ்வரத்தில் வரும் 28ம் தேதி என் மண் என் மக்கள் என்ற பாத யாத்திரையை தொடங்க உள்ளார். இந்த பாதயாத்திரைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலருக்கும் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமாக எடப்பாடி பழனிச்சாமி, ஜிகே.வாசன், பாமக தலைவர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டணியில் தற்போது வரை இடம் பெறாமல் இருந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரடியாக பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். NDA கூட்டணி தொடர்பாக தில்லியில் நடந்த அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தேமுதிக இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணி இல்லாததால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் தேமுதிக. நிலைப்பாட்டை விஜயகாந்த் அறிவிப்பார் என்ற தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி