தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  H3n2 : ஷாக்.. இன்புளுயன்சா காய்ச்சல் - தமிழகத்தில் முதல் பலி.. எங்கு தெரியுமா?

H3N2 : ஷாக்.. இன்புளுயன்சா காய்ச்சல் - தமிழகத்தில் முதல் பலி.. எங்கு தெரியுமா?

Divya Sekar HT Tamil

Mar 13, 2023, 11:23 AM IST

Influenza fever : திருச்சியில் உயிரிழந்த இளைஞர் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Influenza fever : திருச்சியில் உயிரிழந்த இளைஞர் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Influenza fever : திருச்சியில் உயிரிழந்த இளைஞர் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

H3N2 இன்புளுயன்சா வைரசுக்கு இந்தியாவில் முதல் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளது. கர்நாடகா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தன.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: நாளை அட்சய திருதியை .. இன்று தங்கம் விலை திடீர் குறைவு. . இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

Rain : மக்களே எச்சரிக்கை.. இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. அடுத்த 5 நாட்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

Weather Update: ‘8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் H3N2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் இந்தியாவில் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுவரை கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் H3N2 காய்ச்சலால் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இன்புளுயன்சா காய்ச்சலால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

திருச்சியில் உயிரிழந்த இளைஞர், இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 1,558 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது.

மத்திய அரசின்கீழ் இயங்கும் மருத்துவ குழுக்கள் மூலமாக 2,888 பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் 2.27 லட்சம் பேர் பயனடைந்தனர். அவர்களில், 2,663 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு, உரிய மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 9,840 பேருக்கு இருமல், சளி போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதித்து உரிய சிகிச்சை பெற வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்