தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு!

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு!

Divya Sekar HT Tamil

Jul 24, 2023, 12:45 PM IST

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

விபத்தினால் இறக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கை அல்லது கால் இழப்பு, கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

மாற்றுத்திறனாளிகள் மகன், மகள் கல்வி பயில வருடாந்திர உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது. விடுதியில் தங்கி பயிலும் மகன், மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ,2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக வழங்கப்படும். 12-ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும், விடுதியில் தங்கி பயிலும் மகன் மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2500-ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி