தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திமுக எம்பி ஜெகரட்சகனின் கல்வி நிலையங்களில் அனல் பறக்கும் ஐடி ரெய்டு..பின்னணி என்ன?

திமுக எம்பி ஜெகரட்சகனின் கல்வி நிலையங்களில் அனல் பறக்கும் ஐடி ரெய்டு..பின்னணி என்ன?

Karthikeyan S HT Tamil

Oct 05, 2023, 11:01 AM IST

DMK MP Jagathrakshakan: கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.
DMK MP Jagathrakshakan: கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.

DMK MP Jagathrakshakan: கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.

திமுக நாடளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து, சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை 6.30 மணி முதல் இந்த சோதனையான நடத்தப்பட்டு வருகின்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரி, காஞ்சிபுரம் அருகே உள்ள மதுபான ஆலை, தி-நகரில் உள்ள ஆழ்வார்கள் ஆய்வு மையம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.

புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனின் மருத்துவக் கல்லூரியிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். புதுச்சேரியில் சோதனை நடைபெறும் கல்லூரிக்குள் மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட வருமான வரித் துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் பகுதியில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு, ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்களில் நடைப்பெற்ற சோதனையின் போது , கணக்கில் வராத பணம் ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி