தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallanai History: பாழ்பட்ட கரிகாலன் கல்லணையை சர் ஆர்தர் காட்டன் சரி செய்த வரலாறு!

Kallanai History: பாழ்பட்ட கரிகாலன் கல்லணையை சர் ஆர்தர் காட்டன் சரி செய்த வரலாறு!

Kathiravan V HT Tamil

Jun 16, 2023, 05:45 AM IST

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையல் இன்றை தினம் கல்லணை திறக்கப்படுகிறது. உலகின் மிகப்பழமையான அணைக்கட்டுமானங்களில் ஒன்றாக கருதப்படும் கல்லணையின் வரலாற்றை தற்போது காண்போம்...!
கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையல் இன்றை தினம் கல்லணை திறக்கப்படுகிறது. உலகின் மிகப்பழமையான அணைக்கட்டுமானங்களில் ஒன்றாக கருதப்படும் கல்லணையின் வரலாற்றை தற்போது காண்போம்...!

கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையல் இன்றை தினம் கல்லணை திறக்கப்படுகிறது. உலகின் மிகப்பழமையான அணைக்கட்டுமானங்களில் ஒன்றாக கருதப்படும் கல்லணையின் வரலாற்றை தற்போது காண்போம்...!

காவிரி ஆறு தோற்றம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கூர்க் எனப்படும் குடகு மொழி பேசும் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக பயணித்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிலிகுண்டுலு வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

பின்னர் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி வழியாக பயணிக்கும் காவிரி நதி கல்லணை பகுதியில் கிளை நதிகளாக பிரிந்து தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை செழிக்கை வைத்து பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

முக்கொம்பும் கல்லணையும்

திருச்சிக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் உள்ள முக்கொம்பு என்ற இடத்தில் காவிரி, கொள்ளிடம், காவிரிக்கால் என்று காவிரி ஆறு மூன்றாக பிரிந்து திருவரங்கத்தின் இரண்டு கரைகளில் பாய்ந்து மீண்டும் ஒன்றாக இணையும் இடத்தில்தான் கல்லணை உள்ளது.

இந்த கல்லணையில் 5 பகுதிகளாக நீர் பிரிகிறது. உய்யக்கொண்டான் செல்லும் கல்லணை கால்வாய் முதலாவதாகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி செல்லும் கல்லணை வாய்க்கால் இரண்டாவதாகவும், தஞ்சாவூரை நோக்கி செல்லும் வெள்ளாறு மூன்றாவதாகவும், கும்பகோணம் மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் கடலில் கலக்கும் காவிரி நான்காவதாகவும்,கொள்ளிடத்தில் கலக்கும் இணைப்பு கால்வாயாகவும் கல்லணை ஐந்து பகுதிகளாக பிரிந்து ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை செழுமைப்படுத்துகிறது.

கரிகாலனின் கல்லணை

கரிகாலன் காவிரியில் அணை கட்டியதற்கான குறிப்புகள் பட்டினப்பாலை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் மட்டுமின்றி, தெலுங்கு சோழனின் 7ஆம் நூற்றாண்டு மாலேபட் செப்பேட்டிலும், பராந்தக சோழனின் வேலஞ்சேரி செப்பேட்டிலும் காணப்படுகிறது.

காலப்போக்கில் கரிகாலன் கட்டிய கல்லணையில் அதிக நீர் வரத்தால் மணல் மேடுகள் கல்லணைக்கு முன் குவிந்து காவிரி படுகை மேடாகவும், கொள்ளிடம் பள்ளமான படுகையாகவும் மாறியது.

இந்தனால் நீரோட்டம் முழுவதும் கொள்ளிடத்தில் பாய காவிரி பாசனப்பகுதி வறண்டது. இந்த பிரச்னையை சரி செய்ய பொறியாளர் சர் ஆர்தர் காட்டனை அழைத்தது ஆங்கிலேய அரசு.

சர் ஆர்தர் கட்டன் செய்த மாற்றம்

கரிகாலன் கட்டிய கல்லணையை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய அணையை கட்ட ஆங்கிலேய அரசு முடிவெடுத்த போது, இதற்கு மாற்றாக கரிகாலன் கட்டிய கல்லணையை ஆய்வு செய்யத் தொடங்கினார் ஆர்தர் காட்டன். 

சர் ஆர்தர் காட்டன்

கரிகாலன் கட்டிய கல்லணையை அடிக்கல்லாக வைத்தே புதிய தடுப்புகளை ஏற்படுத்தும் முடிவை எடுத்து அதில் மணல் போக்கிகளை அமைத்து கல்லணைக்கு ‘கிராண்ட் அணைகட்’ என பெயர் சூட்டினார். கல்லணையின் கிழக்கு பகுதியில் அடி மதகுகள் அமைத்து காவிரி நீர் கொள்ளிடம் செல்லாமல் காவிரிக்கே திருப்பி விட்டார் ஆர்தர் காட்டன். சர் ஆர்தர் காட்டன் மேற்கொண்ட கல்லணை சீரமைப்புதான் இன்று வரை டெல்டாவை செழிப்பாக்கிக் கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி