தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் தொழில் கடன் – எங்கு வழங்கப்படுகிறது?

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் தொழில் கடன் – எங்கு வழங்கப்படுகிறது?

Priyadarshini R HT Tamil

Jan 27, 2023, 01:01 PM IST

Loan for Minority : சிறுபான்மையிருக்கு கல்வி மற்றும் தொழில் துவங்க கடன் வழங்கப்படுவதாகவும், தகுதியுள்ளவர்கள் விண்ணபிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Loan for Minority : சிறுபான்மையிருக்கு கல்வி மற்றும் தொழில் துவங்க கடன் வழங்கப்படுவதாகவும், தகுதியுள்ளவர்கள் விண்ணபிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Loan for Minority : சிறுபான்மையிருக்கு கல்வி மற்றும் தொழில் துவங்க கடன் வழங்கப்படுவதாகவும், தகுதியுள்ளவர்கள் விண்ணபிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: 

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கட னுதவித் திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

திட்டம் 1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 20,00,000மும், திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீமும் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. 

கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகப்பட்ச கடனாக ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிக அமிர்த ஜோதி தகவல் பட்சமாக திட்டம் 1ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் மாணவியர்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. 

கடன் மனுக்களுடன், சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக் குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி