தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Goat Sale In Thirumangalam: 1 இல்ல 2 இல்ல 7 கோடி.. 7 கோடி யப்பே.. அதிர வைக்கும் ரம்ஜான் கொண்டாட்டம்!

Goat Sale in Thirumangalam: 1 இல்ல 2 இல்ல 7 கோடி.. 7 கோடி யப்பே.. அதிர வைக்கும் ரம்ஜான் கொண்டாட்டம்!

Apr 21, 2023, 08:38 AM IST

Thirumangalam: அதிகாலை 4 மணி முதல் ஆட்டு விற்பனை களைகட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தகவல் தெரிவித்தனர்.
Thirumangalam: அதிகாலை 4 மணி முதல் ஆட்டு விற்பனை களைகட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தகவல் தெரிவித்தனர்.

Thirumangalam: அதிகாலை 4 மணி முதல் ஆட்டு விற்பனை களைகட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தகவல் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தின் புகழ் பெற்ற திருமங்கலம் ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களை கட்டியது பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இதில் 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

தென் மாவட்டங்களில் மிக முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று திருமங்கலம் ஆட்டுச் சந்தை. இங்கு திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவையுடன் இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதற்கு அங்கு ஆடுகளுக்கு கிடைக்கும் தீவனம் காரணம் என்று ஆடு வளர்ப்போர் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல்,தேனி, விருதுநகர்,நெல்லை , தூத்துக்குடி,தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ஆடுகளின் விலை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 40,000 வரை விற்பனையானது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் ரம்ஜான் பண்டிகை என்பதால் வேறு வழி இன்றி வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

திருமங்கலம் ஆட்டுச் சந்தை நெரிசல் மிக்க இடமாக இருப்பதால் ஆடுகளை வாங்கி செல்வதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சந்தை விரிவாக்கத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்டு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாலை 4 மணி முதல் ஆட்டு விற்பனை களைகட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தகவல் தெரிவித்தனர்.

முன்னதாக இறைச்சியின் விலை அதிகரித்து வருவதால் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் EMI (மாத தவணை) முறையில் இறைச்சி வாங்கியதற்கான கட்டணத்தை திரும்ப செலுத்தும் திட்டத்தை வியாபாரி ஒருவர் அறிமுகப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்து. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி