தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Free Training : மாணவர்கள் கவனிக்க! இலவச தொழிற்பயிற்சி! அரசு நிறுவனத்தில் நேரடி சேர்க்கை! – விவரங்கள் உள்ளே!

Free Training : மாணவர்கள் கவனிக்க! இலவச தொழிற்பயிற்சி! அரசு நிறுவனத்தில் நேரடி சேர்க்கை! – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil

Jul 25, 2023, 01:36 PM IST

அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது -

ட்ரெண்டிங் செய்திகள்

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

Savukku Shankar: ’கை உடைந்த சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு!’ நீதி விசாரணை கேட்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கண்டனம்!

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Today Gold Rate : சூப்பர்.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை குறைந்தது.. சவரனுக்கு ரூ.200 சரிவு!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2 ஆண்டு தொழிற்பிரிவுகள் சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், கட்டிடப்பட வரைவாளர் மற்றும் இயந்திர வரைவாளர், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக், ஓராண்டு தொழிற்பிரிவுகள் இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேஷன், மெக்கானிக் ஆட்டோ பாடி பெயின்டிங் மற்றும் டிரோன் பைலட் 6 மாத தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

10வது தேர்ச்சி மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்தவர்களும் உடனடியாக தொழிற் நிறுவனங்களிலும், மத்திய, மாநில அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.

மேலும் தமிழ்நாடு அரசு டாடா டெக்கனாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில்நுட்பத்துடன் உரிய ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளிலும் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஓராண்டு தொழிற்பயிற்சிகளான மெனபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் & ஆட்டோமேசன், இன்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மெனபேக்சரிங் டெக்னீஷியன் படிப்புக்கு 10 பிளஸ் 2, டிப்ளமோ ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

ஈராண்டு தொழிற்பிரிவுகளான பேசிக் டிசைனர் & விர்டியல் வெரிபையர் (மெக்கானிக்கல்), அட்வான்ஸ் சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன் படிப்புகளுக்கு 10, 12ம் வகுப்பில் ஏதாவது பட்டம் படித்திருக்க வேண்டும்.

இந்த பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். மாதம் ரூ.750 உதவித்தொகை, என்ஐஎம்ஐ பாடப்புத்தகங்கள், வரை படக்கருவி, 2 செட் சீருடைகள் தையல் கட்டணத்துடன், பஸ் பாஸ், ஆகியவை தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

பயிற்சியில் சேர்பவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கி பயில விடுதி வசதி உண்டு நேரடி சேர்க்கைக்கு துணை இயக்குனர்/முதல்வர், அரசு ஐடிஐ, மின்ட், வட சென்னை என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். 044-25209268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி