தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert: உயர் நீதிமன்றம் முதல் ரயில்வே வரை என்ன வேலை?

Job Alert: உயர் நீதிமன்றம் முதல் ரயில்வே வரை என்ன வேலை?

Priyadarshini R HT Tamil

Mar 03, 2023, 02:48 PM IST

Job Opportunities: இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பாட்னா உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Job Opportunities: இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பாட்னா உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Job Opportunities: இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பாட்னா உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மார்ச் 13ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

Gold Rate Today : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து விற்பனை.. இதோ இன்றைய விலை நிலவரம்!

பணி: பொறிளாளர்(சிவில்)

காலியிடங்கள்:10 (UR-7,EWS-1,SC-2)

சம்பளம்: மாதம் ரூ. 40,000 -1,40,000

வயது வரம்பு: 1.2.2023 தேதியின்படி 32 வயதிற்குள்ள இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 – ரூ.1,40,000

கல்விதகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பணி அனுபவம், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பிக்கும் முறை:

http://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.3.2023 ஆகும். 

உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை

பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் (குரூப்-பி) பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (Group-B Post)

காலியிடங்கள்: 550

சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400

வயது வரம்பு: 1.1.2023 தேதியின்படி 18 முதல் 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தது 6 மாத கால கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கொள் குறிவகை கேள்விகளைக் கொண்ட முதற்கட்டத்தேர்வு, விரிவான விடையளிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்ட இரண்டாம் கட்டத்தேர்வு, கம்ப்யூட்டர் திறனறிவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதற்கட்டத்தேர்வு 30.04.2023 அன்று பிகாரில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.600ம், மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.1200ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.patnahighcourt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி