தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Alert: வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலியிடம் – விண்ணபிக்க அழைப்பு

Job Alert: வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலியிடம் – விண்ணபிக்க அழைப்பு

Priyadarshini R HT Tamil

Mar 03, 2023, 02:00 PM IST

Job Opportunities: மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலிப்பணியிடங்களுக்கானதேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களைஇணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.
Job Opportunities: மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலிப்பணியிடங்களுக்கானதேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களைஇணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Job Opportunities: மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலிப்பணியிடங்களுக்கானதேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களைஇணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மத்தியஅரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 577 காலிப்பணியிடங்களுக்கானதேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களைஇணைய வழியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

Heavy Rain : உஷார் மக்களே.. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது!

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

காலிப்பணியிடங்கள்விவரம்:

அமலாக்கஅதிகாரி (Enforcement Officer / Accounts Officer) : 418

உதவிஆணையர் (Assistant Provident Fund Commisioner) : 159

மொத்தக்காலிப்பணியிடங்கள்: 577

தகுதி:

இந்தக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

அமலாக்கஅதிகாரி பதவிக்கும், உதவி ஆணையர் பதவிக்கும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடுபிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுஉண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு யுபிஎஸ்சி இணையதளத்தைப் பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும்முறை:

http://www.upsconline.nic.in/ என்றஇணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ. 25/-ஐ செலுத்தி, தங்களதுஅடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கியதேதிகள்:

விண்ணப்பங்களைமார்ச் 17ம் தேதி மாலை 6 மணிக்குள் இணைய வழியில் மட்டும்சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 18 முதல் 24ம் தேதிக்குள் விண்ணப்பத்தில்திருத்தம் மேற்கொள்ளலாம்.

தேர்வுமையம்:

இதற்காகநாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் முதல் நிலைத் தேர்வு நடைபெறும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வுநடைபெறும். விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு ஏதேனும் ஒரு தேர்வு மையத்தைத்தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல்விவரங்களுக்கு https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-51-2023-engl-250223.pdf என்ற இணைப்பைப் பார்வையிடவும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி