தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  It Worker Death : நசுங்கிய ஐடி பெண் - காரணமான அனைவரும் கைது!

IT Worker Death : நசுங்கிய ஐடி பெண் - காரணமான அனைவரும் கைது!

Jan 30, 2023, 12:34 PM IST

பழைய கட்டிடத்தை இடிக்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்து ஐடி-யில் பணிபுரியும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பழைய கட்டிடத்தை இடிக்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்து ஐடி-யில் பணிபுரியும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பழைய கட்டிடத்தை இடிக்கும் பொழுது சுவர் இடிந்து விழுந்து ஐடி-யில் பணிபுரியும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் ஒட்டி அமைந்துள்ள ஆயிரம் விளக்கு மசூதி அருகே பழைய கட்டிடங்களை வெடிக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது பாழடைந்த பழைய கட்டடத்தை ஜேசிபி மூலம் எடுக்கும் பணி நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

Gold Rate Today : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து விற்பனை.. இதோ இன்றைய விலை நிலவரம்!

HBD Arthur Cotton: 'சோழனின் கல்லணையின் பெருமையை உலகிற்கு சொன்னவர்!’ சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் இன்று!

அப்போது ஒரு பகுதியிலிருந்த கட்டட சுவர் இடிந்து அண்ணா சாலை ஓரமாக விழுந்தது. அப்போது சாலை வரும் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பெண்களை மீட்பதற்குத் தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர் விரைந்து வந்துள்ளனர்.

பின்னர் இடுப்பாடுகள் சிக்கி இருந்த இரண்டு பெண்களையும் 20 நிமிட போராட்டத்திற்குப் பின்பு மீட்டனர். படுகாயம் அடைந்த இரண்டு பெண்களையும் மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது அப்போது மருத்துவர்கள் இதில் ஒரு பெண் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்," விபத்தில் உயிரிழந்த பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரியா என்பது தெரிய வந்துள்ளது. இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சேர்ந்தவர் என்பதும், சென்னையில் உள்ள விடுதிகள் தங்கி பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

பழைய கட்டடங்களை இடிக்கும் போது முறையான பாதுகாப்பு முன் ஏற்பாடுகளைப் பின்பற்றாததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகக் கட்டிடம் இடிக்கும் பணியில் உடனடியாக நிறுத்த வேண்டுமெனச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி விதித்துள்ள எந்த விதிமுறைகளையும் கட்டளை இடுப்பின்போது கடைப்பிடிக்கவில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஓட்டுநர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய மூன்று பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

அதே சமயம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் மற்றும் மாநகராட்சி விதிகளைப் பின்பற்றாமல் கட்டடத்தை இழுத்து பெண் உயிர் இழக்கக் காரணமாக இருந்த ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் சையது அலி பாத்திமா தலைமறைவாக இருப்பதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி