தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  School Holiday : மாணவர்களே ஹேப்பி நியூஸ்.. காலாண்டு விடுமுறை 5 நாள் இல்லை.. முக்கிய அறிவிப்பு!

School Holiday : மாணவர்களே ஹேப்பி நியூஸ்.. காலாண்டு விடுமுறை 5 நாள் இல்லை.. முக்கிய அறிவிப்பு!

Divya Sekar HT Tamil

Sep 25, 2023, 11:28 AM IST

காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைய உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இதன் பிறகு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை உள்ள ஐந்து நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தி போன்றவை அரசு விடுமுறை தினங்களாகவும், சனி ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகவும் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் தனியாக காலாண்டு விடுமுறை இல்லை அரசு விடுமுறை நாட்களில் வருகிறது என கவலையில் உள்ளனர்.

அதாவது காலாண்டுக்காக தனியாக விடுமுறை இல்லாமல் வழக்கமான விடுமுறை நாட்களில் காலாண்டு விடுமுறை வருகிறது என்று மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் காலாண்டு தேர்வு விடுமுறையின் 7 நாட்களில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிய வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி