தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thoothukudi Floods: ’தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் பணம் தர வேண்டாம்!’ ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

Thoothukudi Floods: ’தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் பணம் தர வேண்டாம்!’ ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

Kathiravan V HT Tamil

Dec 24, 2023, 08:12 PM IST

“தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் வர ஏதுவாக விலக்கு அளித்து உத்தரவு”
“தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் வர ஏதுவாக விலக்கு அளித்து உத்தரவு”

“தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் வர ஏதுவாக விலக்கு அளித்து உத்தரவு”

தூத்துக்குடியியில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மக்களே.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்!

Savukku Shankar: ‘சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சு!’ மன்னிப்பு கேட்டது ரெட்பிக்ஸ் நிறுவனம்!

Weather Update: ’கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை!’ தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளை சீர் செய்திடவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் முதல்வரின் உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல், மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 6 பேரை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

இதன்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் டி.கார்த்திகேயன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தரேஸ் அகமது, பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜாண் வர்க்கீஸ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பொன்னையா, பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், கிரண் குராலா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்த பகுதிகளான ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி, மேல மங்கலகுறிச்சி, கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிக்காடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வரதராஜபுரம், சிவராமமங்கலம், அப்பன்திருப்பதி, குலசேகரநத்தம், சாமிஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, தெற்கு, கோட்டைக்காடு, சென்னை- திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டம், சென்னை- வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், சூழவாய்க்கால், மேலஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் வரும் நிலையில், வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி