தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Exam Fear Student Commits Suicide Of Exam Fear

Exam Fear :எக்ஸாமுக்கு பயந்து இப்டியா பண்ணுவாங்க? குமரியில் பரிதாபம்

Priyadarshini R HT Tamil

Apr 01, 2023, 09:36 AM IST

Student Suicide : தேர்வு பயத்தில் விஷம் குடித்த சென்னை கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
Student Suicide : தேர்வு பயத்தில் விஷம் குடித்த சென்னை கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Student Suicide : தேர்வு பயத்தில் விஷம் குடித்த சென்னை கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் அன்னை தெரசாள் காலனியைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருடைய மகன் ஆன்றோ ஜாய் (22). இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்து எம்.சி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர் இருந்ததாக கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

இதனால், கடந்த சில நாட்களாக தேர்வு பயத்தில் மனமுடைந்த நிலையில் ஆன்றோ ஜாய் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஆன்றோ ஜாய் கல்லூரி விடுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். 

பின்னர், ஆன்றோ ஜாய்யின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக குமரி மாவட்டம் அழைத்து வந்து குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று ஆன்றோ ஜாய் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆன்றோ ஜாய்யின் தந்தை ஜான்சன் கருங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வு பயத்தில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

வாழ்க்கையில்வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலைஎதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களைஅழைக்கலாம். 

மாநிலஉதவி மையம் :104

சினேகாதன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசிஎண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

டாபிக்ஸ்