தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Evks Elangovan: தனியார் மருத்துவமனையிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ

EVKS Elangovan: தனியார் மருத்துவமனையிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் டிஸ்சார்ஜ

Apr 06, 2023, 02:10 PM IST

உடல் நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
உடல் நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

உடல் நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி நள்ளிரவு சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் திடீர் நெஞ்சுவலி அவருக்கு ஏற்பட்டிருந்ததாகவும், லேசான நுரையீரல் தொற்று பாதிப்பும் அவருக்கு இருந்தது.

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் 22ஆம்தேதி மருத்துவமனை நிர்வாகம், ஈவிகேஎஸ் இளங்கோவன், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார் என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதய செயலிழப்பு மற்றும் கோவிட் நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வருகிறார் என மருத்துவனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .  

இந்நிலையில், இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அந்த மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி