தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode Election: ஈரோடு இடைத்தேர்தல்- விறுவிறுப்பாக தொடங்கிய மாதிரி வாக்குப்பதிவு!

Erode Election: ஈரோடு இடைத்தேர்தல்- விறுவிறுப்பாக தொடங்கிய மாதிரி வாக்குப்பதிவு!

Divya Sekar HT Tamil

Feb 20, 2023, 01:19 PM IST

Erode By Election : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்கு இயந்திரங்களில் ரேண்டம் முறையில் 5 சதவிகிதம் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியது.
Erode By Election : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்கு இயந்திரங்களில் ரேண்டம் முறையில் 5 சதவிகிதம் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியது.

Erode By Election : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்கு இயந்திரங்களில் ரேண்டம் முறையில் 5 சதவிகிதம் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த தேர்தல் ஆணையம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: ஒரே நாளில் சட்டென குறைந்த தங்கம் விலை..சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ!

TNEB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

Weather Update: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான முன் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைப்பெற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 52 மையங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. இடைதேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குசாவடிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் திமுக. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நேற்று காலை முதலே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்கு இயந்திரங்களில் ரேண்டம் முறையில் 5 சதவிகிதம் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியது. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த மாதிரி வாக்குப்பதிவில், ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி