தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி - என்ன தெரியுமா?

ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி - என்ன தெரியுமா?

Karthikeyan S HT Tamil

Jan 28, 2023, 10:06 AM IST

Egg Prices: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மூன்று மாதத்திற்கு பிறகு அதிரடியாக குறைந்துள்ளது.
Egg Prices: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மூன்று மாதத்திற்கு பிறகு அதிரடியாக குறைந்துள்ளது.

Egg Prices: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மூன்று மாதத்திற்கு பிறகு அதிரடியாக குறைந்துள்ளது.

முட்டையின் நுகர்வைப் பொறுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, நாமக்கல் மண்டலத்தில் (சென்னை தவிர தமிழகம் முழுவதும்) பண்ணைக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பண்ணைக் கொள்முதல் விலையாக கடந்த 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் விலை 5 ரூபாய் 65 காசுகள் என உச்சபட்ச விலையில் இருந்தது. பின்னர் ஒரே நாளில் 20 காசுகள் குறைத்து 5 ரூபாய் 45 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 25 ஆம் தேதி மேலும் 30 காசுகள் குறைக்கப்பட்டு 5 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது மேலும் 25 காசுகள் பண்ணைக் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு 4 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறுகையில், வட மாநிலங்களில் தொடர்ந்து முட்டையின் விலை, முட்டையின் விற்பனை குறைந்து வருவதால் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் முட்டை தேக்கத்தை குறைத்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகவும் இவ்விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

முட்டை விலைக் குறைப்பு அசைவ பிரியர்களுக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், ஹோட்டல்களில் ஆம்லெட், ஆப்பாயில், கலக்கி, அவித்த முட்டையின் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் அசைவ பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாமக்கல் மண்டலம்:

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவுக்கு மாதம்தோறும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி