தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Palani Kumbabishekam 2023: பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

Palani Kumbabishekam 2023: பழனி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

Karthikeyan S HT Tamil

Jan 22, 2023, 12:28 PM IST

பழனி முருகன் கோயிலில் மூலவரை நாளை மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர் வருகை அதிகரித்துள்ளது. மலை மீது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோயிலில் மூலவரை நாளை மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர் வருகை அதிகரித்துள்ளது. மலை மீது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் மூலவரை நாளை மதியம் வரை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர் வருகை அதிகரித்துள்ளது. மலை மீது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் திருவிழாக்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் வெகு விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கோடை மழை! குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!’

Gold Rate Today : சூப்பர் நியூஸ்.. தங்கம் விலை சரிந்தது.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இதோ இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம்!

11th Exam Results : 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% மாணவர்கள் தேர்ச்சி!

Heavy Rain : உஷார் மக்களே.. திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது!

இந்நிலையில், பழனியில் உள்ள முருகன் கோயிலில் வருகிற 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு மலைக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பாபிஷேக விழாவை ஒட்டி மலைக் கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் ஓதத் துவங்கியுள்ளனர். (நாளை) 23 ஆம் தேதி மாலை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சன்னதி திரையிட்டு மூடப்பட உள்ளது. நாளை மதியம் வரை மட்டுமே பக்தர்கள் மலைமீதுள்ள மூலவரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் இன்று பழனிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

23 ஆம் தேதிக்கு பிறகு பழனிக்கு வரும் பக்தர்கள் மலை மீது சென்று யாகசாலையை வணங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதிகாலை முதலே மலை அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காவடிகளை சுமந்து ஆடி, பாடி கிரிவலம் வந்து முருகனை தரிசிக்க மலை மீது சென்று வருகின்றனர்.

பழனியில் பக்தி பரவசத்தில் நடனமாடும் பெண்கள்.

மலை மீது நீண்ட வரிசையில் மூன்று மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மலையடிவாரம் மற்றும் மலை மீது கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்..

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி