தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sathuragiri: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; மூச்சுத் திணறி கோவை பக்தர் பலி!

Sathuragiri: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; மூச்சுத் திணறி கோவை பக்தர் பலி!

Karthikeyan S HT Tamil
Jan 21, 2023 05:24 PM IST

Devotee Dies in Sathuragiri: தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்
சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் தை அமாவாசையை முன்னிட்டு கடந்த 19 ஆம் தேதி முதல் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்தது. மேலும், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மலையேறி நேராக கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வேண்டும் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதாலும், தை அமாவாசை தினம் என்பதலாலும் சதுரகிரியில் காலை முதல் பக்தர்கள் குவியத் தொடங்கினர். மதுரை, விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இன்று காலை சதுரகிரி மலையேறிய கோயம்புத்தூர் கே.கே.புதூர் சாய்பாபா நகரைச் சேர்ந்த சிவக்குமார் (48) என்ற பக்தர் சதுரகிரி மலையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோயில் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து அப்பகுதியில் இருந்த வனத்துறையினர் சடலத்தை மீட்டு அடிவாரப் பகுதிக்கு கொண்டு வந்தனர். பின்னர், ஆம்புலென்ஸ் வாகனம் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிவக்குமார் சடலம் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, சாப்டூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை அமாவாசையை முன்னிட்டு இன்று ஒரே நாளில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி கோயிலில் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்