தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  3 மான், 2 துப்பாக்கி: சிக்கிய வேட்டைக் கும்பல்- இந்த வயசுல செஞ்ச வேலய பாருங்க

3 மான், 2 துப்பாக்கி: சிக்கிய வேட்டைக் கும்பல்- இந்த வயசுல செஞ்ச வேலய பாருங்க

Priyadarshini R HT Tamil

Jan 22, 2023, 12:45 PM IST

பெரம்பலூர் அருகே ஆடு திருடும் கும்பலைத் தேடிச் சென்ற போலீஸாரிடம் பல ஆண்டுகளாக மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த கும்பல் சிக்கியுள்ளது.
பெரம்பலூர் அருகே ஆடு திருடும் கும்பலைத் தேடிச் சென்ற போலீஸாரிடம் பல ஆண்டுகளாக மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த கும்பல் சிக்கியுள்ளது.

பெரம்பலூர் அருகே ஆடு திருடும் கும்பலைத் தேடிச் சென்ற போலீஸாரிடம் பல ஆண்டுகளாக மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த கும்பல் சிக்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகள், வயல்கள், பட்டிகளில் கட்டப்பட்டுள்ள ஆடுகள் அதிகளவில் திருடு போவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இச்செயலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கைது செய்வதற்காக பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ-க்கள் சிவக்குமார், ரமேஷ், மணிகண்டன், போலீசார் இளவரசன், கார்த்திக் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!

Weather Update: ‘தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கோடை மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Nagai MP Selvaraj Passed Away: நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்!

What is Goondas Act: ‘யூடியூபர் சவுக்கு சங்கர் கைதுக்கு எம்ஜிஆர் காரணமா?’ குண்டர் சட்டம் என்றால் என்ன?

இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி வேன், போலீஸாரைக் கண்டதும் மிக வேகமாக சென்றது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அதனை விரட்டி பிடித்து சோதனையிட்டபோது, உள்ளே உயிரிழந்த நிலையில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான், 8 மாதமுடைய ஆண் மான், 2 வயதுள்ள பெண் மான் என 3 மான்களும், 2 கள்ளத் துப்பாக்கிகளும் இருந்தன.

 

மான் வேட்டையாடி கைதான நபர்கள்

வேனில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது பெரம்பலூர் மாவட்டம் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சோலைமுத்து மகன் வேட்டைமணி (எ) மணிகண்டன் (24), முருகேசன் மகன் ராமச்சந்திரன் (31), வெள்ளனூரைச் சேர்ந்த கணேசன் மகன் கோவிந்தன் (33), பெருமாள் மகன் கார்த்திக் (19), இவரது சகோதரர் மணி (17) ஆகியோர் என்பதும், திருச்சி மாவட்டம் எதுமலை வனப் பகுதியில் வேட்டைக்குச் சென்று நாட்டு துப்பாக்கியால் 3 மான்களையும் சுட்டிப்பிடித்து கொண்டு வந்ததும், இளைஞர்களான இவர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக இச்செயலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. மேலும் இந்த துப்பாக்கிகளில் ஒன்று வேட்டைமணி, மற்றொன்று கோவிந்தனுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட 5 பேர், பறிமுதல் செய்யப்பட்ட 3 மான்கள், 2 நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு மினி வேன் ஆகியவற்றை பெரம்பலூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு வனத்துறை மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் பகுதியில் ஆடு வேட்டையாடும் கும்பலைப் பிடிக்கச் சென்றபோது, மான் வேட்டையாடும் கும்பல் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி