தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை’ - முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

‘மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை’ - முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

Karthikeyan S HT Tamil

Oct 05, 2023, 12:58 PM IST

CM MK Stalin: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
CM MK Stalin: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

CM MK Stalin: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

திமுக நாடளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரி, காஞ்சிபுரம் அருகே உள்ள மதுபான ஆலை உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.

எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என அமலாக்கத்துறையை நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக மறந்துவிடுகிறது.

 

எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்துவரும் ஒற்றுமையை கண்டு பாஜக பயப்படுகிறது. விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதற்கு இதுவே எடுத்துக்காட்டு. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்திவிட்டு உண்மையான பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி