தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Chief Minister Mk Stalins Press Meet In Delhi

பல கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்படும் - முதல்வர்!

Divya Sekar HT Tamil

Aug 17, 2022, 01:23 PM IST

இன்று மாலை 4.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க நேரில் வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

குடியரசு துணை தலைவரை சந்தித்தபோது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

<p>குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு</p>

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”இன்று மாலை 4.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க நேரில் வந்தேன்.

அவரிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படும். நீட் தேர்வில் விலக்கு, நீட் தேர்வு, மின்சாரம், காவிரி, மேகதாது அணை போன்ற பல கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்படும்”எனத் தெரிவித்தார்.

டாபிக்ஸ்