தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm M.k.stalin : ’இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி’.. இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

CM M.K.Stalin : ’இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி’.. இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

Divya Sekar HT Tamil

Jun 02, 2023, 10:56 AM IST

இசையமைப்பாளர் இளையராஜாவின் 80வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 80வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 80வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களின் மனம் கவர்ந்த கள்வன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இசைஞானி இளைய ராஜாவின் பிறந்த நாள் இன்று.தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் இராமசாமி சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக கடந்த 1943ம் ஆண்டு ஜூன் 2ந் தேதி பிறந்தார் இசைஞானி இளையராஜா. 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறப்புகள் ஆவார். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார்.

1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் தலைநகர் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும் இசையின் நுணுக்கங்களையும் அவரிடமே கற்று தேர்ந்தார். 

பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.இளையராஜா எஸ்பிபியின் கூட்டணி ரசிகர்களை அரை நூற்றாண்டுகள் கட்டிப்போட்டது. நடிகர்கள் ரஜினி, கமல், மோகன், ராமராஜன் போன்றோரின் சினிமா வாழ்க்கைகைக்கு அஸ்திவாரமிட்டதில் இளையராஜாவின் பங்கும் அளப்பரியது.இப்படி 80களில் கோலோய்ச்சிய இளைய ராஜா இன்றும் தன் ரசிகர்களை தன் கதகதப்பில் தான் வைத்துள்ளார்.

இசைஞானி இளைய ராஜாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு அரசியல்கட்சி தலைவர்கள்,திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 80வது பிறந்தநாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில்,” காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!

அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.

இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.

எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி