தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aiadmk: அதிமுக பொதுக்குழு.. மணமணக்க தயாராகும் உணவு... என்னென்ன தெரியுமா?

AIADMK: அதிமுக பொதுக்குழு.. மணமணக்க தயாராகும் உணவு... என்னென்ன தெரியுமா?

Karthikeyan S HT Tamil

Dec 26, 2023, 11:33 AM IST

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மஹாலில் இன்று (டிச.26) நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனா்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கிராமிய நடனங்கள், பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. அதோடு நாடாளுமன்ற கட்டடம் போன்ற நுழைவாயிலும் பல்வேறு கட்டவுட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. 

ஜெயலலிதா காலத்தில் இருந்தே பொதுக்குழுவில் பரிமாறப்படும் உணவு குறித்து எதிர்பார்ப்புகள் எகிறும். அதற்கு ஏற்ற வகையில் அதிமுகவினர் தடபுடலாக விருந்து ஏற்பாடுகள் செய்யப்படும். அந்த வகையில், இன்று நடைபெற்று வரும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் பரிமாறப்பட உள்ள அறுசுவை உணவு லிஸ்ட் வெளியாகி உள்ளது.

உணவு லிஸ்ட்

தம்ப்ரூட் அல்வா

வெஜ் பிரியாணி

வெங்காயம் வெள்ளரி மாதுளை தயிர் பச்டி

பருப்பு வடை

புடலங்காய் கூட்டு

கோஸ், பீன்ஸ், கேரட் பட்டாணி பொரியல்

பால்கறி கூட்டு

உருளைக் கிழங்கு மசாலா

வெண்டிக்காய், மொச்சை மண்டி

வத்தக் குழம்பு

தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் சாம்பார்

போண்டா மோர் குழம்பு

தக்காளி ரசம்

தயிர், ஊறுகாய்

அப்பளம், பருப்பு நெய்

மோர் மிளகாய்

அடைப்பிரதமன் பாயாசம்

வாழைப்பழம்

ஐஸ்கிரீம்

பீடா

வாட்டர் பாட்டில்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி